ஒம் நமச்சிவாய வாழ்க வாழ்க    ஒம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க    ஒம் சற்குருநாதர் திருவடிகளே சரணம் சரணம்
 HOME  ABOUT US  ARTICLES GALLERY  CONTACT US  
 
Login
Email
Password  
 
Registration  |   Forgot Password
Links
ஆத்ம லாபம்
இந்து மதம்
உருவ வழிபாடு
ஞானிகளின் கருணையே கோயில்
பக்தியும் கோயிலும்
மன வலிமையும், தன்னை உணர்தலும்
நல்வழிப்படுத்திக் கொள்ள
எண்ணம் போல் வாழ்வு
சுயமதிப்பீடு செய்தல்
நமது லட்சியங்கள்
  Home » Links

நம்மை நாம் நல்வழிப்படுத்திக் கொள்ள 18 படித்தளங்கள்

  1. எதையும் சுயமதிப்பீடு செய்யும் பக்குவம் வளர நல்ல குருவைத் தேடி, அவரின் வாயிலாக நல்ல கருத்துக்களை அறிந்து பிறகு உணர்ந்து பாருங்கள்.

  2. ஐம்புலன்கள் வழியில் சென்றால் மாயை நரகத்தில் தள்ளிவிட்டு உங்களை வேடிக்கை பார்க்கும். ஆனால் உணர்வுப் பாதையில் செல்பவர் இறைவனின் பாதக்கமலத்தில் இருப்பார்.

  3. உங்கள் மனம் அவ்வப்போது பாதைமாறி தவறான வழியில் இழுத்துச் செல்லும்போது குருவின் துணையாலும், சற்குருவின் அருளாலும் உள் உணர்வு உங்களை நல்வழியில் திருப்பிச் செல்லும்.

  4. இன்ப துன்பம் கவலை வரும் நேரத்தில், உங்கள் மனதை இழுத்து இறைவன் பக்கம் திருப்பி சற்குரு மந்திரத்தைக் கூறி பயிற்சி செய்து பாருங்கள். ஆனந்தம் கிடைக்கும்.

  5. பிறகு பிறர் குறையைப் பார்த்து உணர்ந்து, தன் குறையைக் கண்டு திருத்தி தன்னை நல்லவராக்கிக் கொள்வீர்கள்.

  6. தியானப் பயிற்சி கூடக்கூட, சுய விசாரணை செய்யச் செய்ய ஞான வழிப்பாதையின் மிகப் பெரிய முதல் இரும்புக் கதவை இறைவன் கொஞ்சம் கொஞ்சமாகத் திறப்பார்.

  7. இந்த நேரத்தில் மாயை மும்மலங்களை உங்களுக்குள் விசுவரூபமெடுக்கச் செய்யும். சற்குரு மந்திரத்தாலும் குருவின் அறிவுரைகளை நினைத்துப் பார்ப்பதாலும் மீண்டும் வெற்றிப்பாதையில் முன்னேறுவீர்கள்.

  8. இரண்டு பக்கமும், அடிக்கடி உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஒன்று உலக வாழ்க்கை, மற்றொன்று ஞானவாழ்க்கை.

  9. வெற்றி என்பது பணம், புகழ் சம்பாதிப்பது மட்டும் அல்ல. அத்துடன் ஞான குருவின் உதவியால் இறைவனைக் கண்டு உணர்வது. பூமியில் சற்குருவே இறைவன் என்று நம்புவது.

  10. பலரை வெற்றி பெற்றவர்கள், என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்கள் பலமுறை தோல்வியைக் கண்டவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

  11. மற்றவர்கள் புகழ்வதற்காக ஒன்றைச் செய்வதைக் காட்டிலும், பிறர் உயர்வு பெற பணி செய்பவர் இறைவனின் அன்புக்குரியவர். இவர்களை இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டார்.

  12. உங்களை உண்மையாக நேசிப்பவர்களின் நலன் கருதுவது. இறைவனுக்கு தொண்டு செய்வதற்கு சமமாகும்.

  13. இறந்த காலத்தின் தவறை நினைத்துப் பார்ப்பது இன்று நாம் திருந்தத்தான். ஆனால் அதை நினைத்து வருந்திக் கொண்டிருப்பதற்காக இல்லை.

  14. உங்கள் முன்னேற்றத்திற்கு பிறர் தடையாக இருப்பதாக குறை கூறாதீர்கள். முதலில் உங்களை உற்றுநோக்குங்கள். பிறகு உண்மைத் தொண்டராக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். ஒருநாள் உண்மையைக் கண்டடைவீர்கள்.

  15. தொடர்ந்த உழைப்பும், இறை நினைப்பும், மந்திரமும், தியானமும் உங்களை உயர்ந்த மனிதராக்கும்.

  16. இதனால் இறை விசுவாசமும், குரு நன்றியும் மனதில் மலரும்.

  17. உடனே உண்மை உங்களிடம் மேலோங்கும். அப்பொழுது பரிசுத்தம் ஆவீர்கள். மனமும் அறிவும் ஒன்று சேரும்.

  18. ஞானகுருமார்கள் உங்களை நேசித்து ஆசிர்வதிப்பார்கள், உங்களிடம் இறைவன் குடி கொள்வார். எதிலும் மயக்கம் இருக்காது. பௌர்ணமி போன்று என்றும் முழுமையாகப் பிரகாசிப்பீர்கள்.
மகாகுரு

Designed By profitideal web design and hosting company
© 2007 Dhuraimurugar Marabu Sitthaanda Dhiyana Sabai