|
"ஆத்ம விசாரணையால் ஆன்ம லாபம் பெறலாம்"
சமையல் வேண்டுமானால் நமது உடலை வளர்க்கலாம்.
ஆனால் சமயக் கருத்துக்கள்தான் நம் உள்ளத்தை உயர்த்தும்
|
இருளுக்குள் கைவிளக்காகிய டார்ச் லைட்டை எதன்மீது அடித்தாலும் அப்படியே நமக்கு காட்டும். இதைபோன்று உங்களுக்குள் இருக்கும் பகவானை அறிய மனமாகிய டார்ச் லைட்டை தன் பக்கம் திருப்பிப் பாருங்கள். பிறகு தனக்குள்ளே இருக்கும் அருள்ஜோதியை பார்த்து ஆனந்தமடைவீர்கள்.
ஆசை : மனம் தேவையற்ற விசயங்களில் ஆசை வைத்து பிறகு படிப்படியாக பேராசையாகமாறி துன்பப்படுபவர்கள் நம்மில் ஏராளம்.
கோபம் : சின்ன சின்ன விசயங்களுக்குப்போய் கோபப்பட்டு அத்துடன் பழிவாங்கும் எண்ணம் மனதில் அதிகரித்து டென்சனாகி ரத்தஅழுத்தம் சர்க்கரை வியாதி மனநோய் வந்து மன வேதனைப்படுபவர்கள் உலகில் ரொம்ப அதிகம்.
பயம் : எதற்கெடுத்தாலும் மனதில் பயம் தோன்றி எதிலும் துணிந்து செயல்படவிடாது தடுப்பதால் தனது திறமையை வெளிக்காட்ட முடியாது தவிக்கின்றனர். திறமை இருந்தும் பயத்தில் உயரமுடியாது இருப்பவர்கள் உலகில் கணக்கிலடங்காது.
நமக்கு பகவத்கீதை ஒரு ஞான சட்ட புத்தகம். நமது மகாகுரு வக்கிலாக சரியான பாயிண்டுடன் இந்த இணையதளத்தில் இலவசமாக வழக்காட களம் இறங்குகிறார். இனி வெற்றி உங்களுக்கே.
|
|
| |
| இந்த வெற்றியால் கிடைப்பவைகள் |
- மனத்தெளிவு
- மனக்கட்டுப்பாடு
- உள்ளத்தில் ஆனந்தம்
- உயர்ந்த நோக்கம்
- சுய முன்னேற்றம்
- தொண்டு உள்ளம்
- குடும்பத்தில் மகிழ்ச்சி
- பெரியவர்கள் நட்பு
- உலகப்பற்றிலிருந்து விடுதலை
- ஆன்மீக முன்னேற்றம்
|