HOME தியானத்தின் வெற்றி GURUJI SPEECH உள்ளம் பெருங்கோயில் பக்தியின் சிறப்பு பக்தியும் கோயிலும் BOOKS STICKERS  
 

பக்தியின் சிறப்பு :

 
பக்தியைக்கூட மற்றவர்கள் மதிப்பதற்காக செய்பவர்கள் பலர். பெரிய பக்தன் என்று சொல்லிகொன்டு அலைவதும் தப்பான விசயம் தான். ஒவ்வொவருவருக்கும் மனம் இருக்கிறது. ஆனால் அந்த மனதை புத்திசாலித்தனமாக இறைவன் பக்கம் திருப்புவதும் பிறகு பகவானை விடாது நினைப்பதும் அவரவர் திறமையாகும். சாமார்த்தியமும் புத்திசாலித்தனமும் இல்லாதவருக்கு ஞானம் கைகூடாது.
   
 

"தன்னை முற்றிலும் அறிந்து கொண்டாலொழிய
மனிதன் தன்னை ஒழுங்குபடுத்த முடியாது"
   
 
வனவாசம் சென்ற பாண்டவர்கள் வனத்திலே பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். பல்வேறு இடையூறுகள் கஷ்டங்கள் ஏற்பட்டபோதும் தனது பக்தியை அவர்கள் கைவிடவில்லை.
   
 
தனது எதிரியான துரியோதனனைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டிருந்தனர்.
   
 
அதே நேரத்தில் பீமன் வனவாசம் முடியும் வரை தன் பலத்தை நம்பி பெருமையுடன் காத்திருந்தான். ' நம் பலத்திற்க்கு இணையாக எவனிருக்கிறான். இந்த உலகில் எனக்கு நிகர் நானே' எனத் தற்பெருமை பேசிக் கொண்டான்.
   
 
அப்பொழுது திரெளபதியோ தன் பக்தியின் சிறப்பினை நினைக்கலானாள். "தன் பக்திக்கு நிகர் உலகில் யாருமில்லை. துரியோதனன் சபையில் பகவான் கிருஷ்ணர் சேலை அளித்து மானத்தை காப்பாற்றிய செயல் குறித்து திரும்பத் திரும்ப நினைத்து மகிழ்ச்சி கொண்டாள்.
   
  மற்றவர்கள் பக்திக்கு பகவான் கிருஷ்ணர் தோன்றி உதவி செய்கிறாரோ இல்லையோ ஆனால் எனது பக்திக்கு நேரிலேயே வந்துவிடுவார். அந்த அளவிற்கு என் பக்தி உயர்ந்தது" என்று தனக்குள்ளே பேசிக் கொன்டிருந்தாள்.
   
 
இருவருடைய எண்ணங்களையும் அறிந்த பகவான் கிருஷ்ணர் இருவருக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார்.
   
 
துவாரகையிலிருந்து நேரடியாக இவர்கள் இருக்கும் இடத்திற்கு அதாவது அந்த காட்டிற்கு வந்தார் பகவான். வந்ததும் பாண்டவர்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்தனர். 'தாங்கள் எதில் வந்தீர்கள்?' என்று கேட்டனர்.
   
  அதற்கு பகவான் 'துவாரகையிலிருந்து கால் நடையாக வந்துவிட்டேன்!' என்று கூறினார்.
   
 
திரெளபதி பகவானிடம், 'அண்ணா! தாங்கள் நடந்தே வந்ததால் கால்கள் வலி எடுக்குமே?" என்றதற்கு, பகவான் 'கால்கள் வலிக்கத்தான் செய்கின்றன. அதற்கு என்ன செய்ய முடியும்?' என்று வருந்துவதுபோல் நடித்தார்.
   
 
உடனே திரெளபதி பகவானிடம் 'உங்கள் கால்வலி தீர, வெண்ணிர் வைத்துத் தரட்டுமா?' என்று கேட்டதும் 'முடிந்தால் வைத்து கொடு!' என்று கூறினார்.
   
 
திரெளபதியும் 'தங்களுக்கு இல்லாததா?' என்று கூறியபடி வெண்ணிர் வைக்க ஆரம்பித்தாள்.
   
 
பீமன் பெரிய அண்டா ஒன்றைக் கொண்டு வந்தான். பிறகு அதில் கொண்டு வந்த தண்ணீரை ஊற்றினான்.மூன்று கற்களை வைத்து அதன்மேல் அண்டாவை தூக்கி வைத்தான். உடனே திரெளபதி அடுப்பை மூட்டினாள்.
   
 
பீமன் தேடிச் சென்று பல காய்ந்த விறகுகளைக் கொண்டு வந்து உடைத்து எரிகின்ற நெருப்பில் போட்டு தண்ணிரை இருவரும் சூடாக்கினர்.
   
 
பகவான் கிருஷ்ணர் தருமனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது, நெடு நேரமாகியும் சுடு தண்ணீர் வரவில்லையே?' என்று பேசிக் கொன்டிருந்த இடத்திலிருந்தே பகவான் கேட்டார்.
   
 
பல மணி நேரமாகியும் பீமன் பல மரங்களின் விறகுகளைப் போட்டு எரித்து எரித்து அதனால் ஏற்பட்ட புகையில் கண்ணைக் கசக்கிக்கொண்டு நின்றான்.
   
 
திரெளபதையும், பீமனும் என்ன செய்வது என்று புரியாது திகைத்து நிற்க பகவான் கிருஷ்ணர் அடுப்பின் அருகில் வந்தார். எல்லோரும் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். பகவான்,'பீமா வெகு நேரம் நீங்கள் சூடாக்கிய வெண்ணீரை பத்திரத்தோடு கீழே கவிழ்த்து விடு!' என்றார்.
   
 
உடனே பாத்திரம் கவிழ்த்துவிடப்பட்டது. அந்த தண்ணீரிலிருந்து தவளை ஒன்று ஒடியது. அதன் வாய் பகவான் கிருஷ்ணரின் பெயரை முணுமுணுத்தன. பகவான் அந்த தவளையைப் பற்றி சொல்லலானார்.
   
 
'பீமா! நீ தண்ணீர் எடுத்து வரும் பொழுது அந்த நீருடன் இந்த தவளையும் வந்துவிட்டது. பானையில் நீரை நீங்கள் கொதிக்க வைத்தபொழுது, அது என் பெயரைச் சொன்னது! அதனால்தான் பானையின் நீர் குளிர்ந்த நிலையிலேயே இருந்தது. அத்தவளையின் பக்தியை என்னவென்பது" என்று கூறிவிட்டுத் தவளைக்கு அருள் புரிந்தார்.
   
 
தவளையின் பக்திக்கு செவி சாய்த்த பகவான் கிருஷ்ணரின் சிறப்பைக் கண்டு வியந்தனர்.
   
 
எவ்வளவோ விறகைப் போட்டு எரித்த பீமனின் பலமும் அங்கு வேலை செய்யவில்லை. திரெளபதியோ பக்திக்கு மனிதர்கள் மிருகங்கள் என்னும் உயர்வு - தாழ்வு இல்லை என்பதை தெளிவுற உணர்ந்தாள்.
   
 
"மேலான எண்ணம், வாழ்வு என்னும் விளக்கு ஏற்ற எண்ணெய் ஆகிறது.

வெற்றி பயன்படுவது போன்று தோல்வியும் உனக்குப் பயன்படுகிறது."
   
 
அச்சமும் அவலமும் அற்ற நிலை
என்பது செல்வத்தாலோ
சுற்றத்தலோ, கல்வி அறிவாலோ
கிட்டுவதல்ல.
   
 
அது கடவுள் பக்தியால்
மட்டுமே கிட்டும் பேறு.
   
  "நூறு கோடி பிறவிகளின் நற்பலன்களின் விளைவாய் கிட்டுவதே உண்மையான இறைபக்தி"

     
-ஞானத்தின் நுழைவாயில்